ரஜினியின் கபாலி படத்தின் முதல் ஷோ தொடங்கிவிட்டது. இதன் முதல் பிரீமியர் காட்சியாக மலேசியாவில் தொடங்க இருந்தது. அதன்படி இன்னும் 30 நிமிடத்தில் மலேசியாவில் கபாலி படம் தொடங்க இருக்கிறது.

kabali_lu001

கபாலி திரையிடப்படும் மலேசியா திரையரங்கு முன்பு கபாலி ஸ்டிக்கர் ஒட்டிய காருடன் ரசிகர்கள் வந்து கலக்கிய காட்சி, தமிழத்தை விட மலேசியாவில் இரண்டு மடங்கு அதிக கொண்டாட்டம்.

kabali_premire001

கபாலி மலேஷியா ப்ரீமியர் காட்சி தொடங்கிவிட்டது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் திரையரங்கிற்கு வர, படம் தொடங்கி சில நிமிடம் ஆகியுள்ளது.

மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் ப்ரீமியர் காட்சி இன்னும் சில நொடிகளில் தொடங்கவுள்ளது, ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

kabali_premire003

மலேசியா ப்ரீமியர் காட்சியில் நடிகை தன்ஷிகா, இயக்குனர் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், தயாரிப்பாளர் டி.சிவா, மாஸ்டர் தினேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

kabali_premire002 kabali_premire004

கபாலி படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக கூட்டம் வந்துள்ளது, குறிப்பாக குழந்தைகள் பலர் கபாலி டி-ஷர்ட் அணிந்து அசத்திவிட்டார்களாம்.