சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வெளிநாடுகளில் இந்த படத்தின் பிரீமியர் காட்சிகள் ஜுலை 21ம் தேதி முடிவு செய்யப்பட்டு அதற்கான டிக்கெட்டுகளும் விற்கப்பட்டன.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுவரை முந்தைய நாள் இரவு 12மணிக்கு மேல் அல்லது அதிகாலையில் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தது.ஆனால் முதல்முறையாக சென்னையிலும் பிரிமியர் காட்சிகள் ஜூலை 21ஆம் தேதி மாலையில் திரையிட கலைப்புலி எஸ். தாணு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.