சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் ஜுலை 1ம் தேதி வெளியாக இருக்கிறது. அதோடு படம் மலாய் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் ரஜினிக்கு மலாய் மொழியில் டப் செய்வதற்காக மொத்தம் 200 பேரை படக்குழுவினர் ஆடிஷன் செய்துள்ளனர். அதில் பல பேரை ஆடிஷன் செய்த பிறகு அருண் என்பவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

தீவிர ரஜினி ரசிகரான இவர் டீசரில் வரும் வசனத்தை பேசி காட்டி படக்குழுவினரிடம் ஓகே வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.