ரஜினியின் கபாலி பட புரொமோஷன்கள் ஒவ்வொன்றையும் கேட்கும் போது ரசிகர்களை அப்படியே அதிர வைக்கிறது. விமானம் மூலம் புரொமோஷன் நடப்பது நாம் அறிந்த விஷயம்.தற்போது வளர்ந்து வரும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான முத்தூட் நிறுவனம் கபாலி உருவம் பொதித்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிடுகிறது.

சுமார் ரூ.40 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம், வெள்ளி நாணயங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ‘கபாலி’ உலகளவில் வியாபாரம் ஆகும் படம் என்பதால் ‘கபாலி’ நாணயமும் உலக அளவில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும், முத்தூட் குரூப் இயக்குனர் தெரிவித்துள்ளார்.தங்கம், வெள்ளி நாணயத்தில் ஒரு திரைப்பட பெயர் வருவது இதுவே முதன்முறையாகும்.