வரும் 24ஆம் தேதி அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படம் பிரமாண்டமாக ரிலீசாக இருக்கிறது. கேரளாவில் விஜய் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட அஜித்துக்கும் அந்த அளவை நெருங்கும் விதமாக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

ஆனால் இந்தமுறை விவேகம் படத்தின் மூலம் விஜய்யை விட கேரளாவில் அஜித் தான் மாஸ் என்பதை நிரூபிக்கும் விதமாக தியேட்டர் ஒப்பந்தங்கள் நடைபெற்று வருகின்றன. கேரளாவில் ‘விவேகம்’ படத்தை வெளியிடுபவர் மோகன்லாலின் பிரமாண்ட படமான புலி முருகனை தயாரித்த தோமிச்சன் முலகுபாடம் என்பதும் ஒரு காரணம்.

அதிகம் படித்தவை:  விக்னேஷ் சிவன் கையால் விருதை கொடுங்கள், நயன்தாராவால் கோபத்தில் முன்னணி நடிகர் ?

அதனால் ‘பாகுபலி-2’வுக்கு அடுத்தபடியாக, கபாலிக்கு இணையாக ‘விவேகம்’ படத்தை சுமார் 3௦௦க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  10-வது ஐபிஎல் இறுதிப் போட்டி: 1 ரன் வித்தியாசத்தில் புனேவை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது மும்பை

கேரள அஜித் ரசிகர்களும் ‘விவேகம்’ பட ரசிகர்மன்ற சிறப்பு காட்சிகளின் எண்ணிக்கையில் மாஸ் காட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள். இதற்கு முன் கேரளாவில் வெளியான விஜய் படங்கள் 200லிருந்து 220 என்கிற தியேட்டர்கள் அளவிலேயே ரிலீசாகி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.