சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘கபாலி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் 22ஆம் தேதி முதல் உலகெங்கும் சுமார் 5000 திரையரங்குகளுக்கும் மேல் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஏர் ஆசியா, 5 ஸ்டார், முத்தூட், ஏர்டெல் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் ‘கபாலி’ படத்துடன் டை-அப் செய்து கொண்டு படத்தையும் தங்கள் பொருட்களையும் விளம்பரப்படுத்தி வருகின்றன.

அதுமட்டுமின்றி இன்னும் ஒருசில நிறுவனங்கள் கடைசி நேரத்தில் ‘கபாலி’யுடன் டை-அப் செய்து கொள்ள கலைப்புலி எஸ்.தாணுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ரஞ்சித், “இப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விளம்பரப்படுத்தியது போதும், படத்தை வெளியிடுங்கள். பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் போது மேலும் விளம்பரப்படுத்தி சித்திரவதை பண்ண வேண்டாம் என தோன்றுகிறது. மக்கள் படத்தைப் பார்க்க தயாராகிவிட்டார்கள். அதுவே போதும் என நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.