கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் அனைத்து இயக்குனர்களின் ஒரே கனவு சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் ஒரே ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அந்த கனவு ரஞ்சித்துக்கும் இருந்தது. ரஜினியின் மகள் செளந்தர்யாவின் நட்பு காரணமாக ரஞ்சித்தின் இந்த கனவு தனது மூன்றாவது படத்திலேயே நிறைவேறிவிட்டது. ஆம், இன்று அவர் இயக்கிய ‘கபாலி’க்கு உலக அளவில் அந்தஸ்து கிடைத்துள்ளது.

அதிகம் படித்தவை:  கபாலி தீர்ப்பு எதிரொலி, 200 மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டது

இந்நிலையில் அவருக்கு இன்னொரு கனவும் இருக்கின்றதாம். அதுதான் விரைவில் தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்பது. அந்த கனவும் விரைவில் நிறைவேற உள்ளதாகவும், தன்னுடைய முதல் தயாரிப்பு குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  2.0 பிரமாண்ட சண்டைக்காட்சியில் புகைப்படம் வெளிவந்தது

‘கபாலி’ படத்தை இயக்கியவதற்காக கண்டிப்பாக கலைப்புலி எஸ்.தாணு ஒரு பெரிய தொகையை சம்பளமாக ரஞ்சித்துக்கு கொடுத்திருப்பார். அந்த பணத்தை வைத்து ஒரு படம் என்ன.. ரஞ்சித் இரண்டு, மூன்று படங்கள் கூட தயாரிக்கலாம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.