கோலிவுட் திரையுலகில் வெற்றி பெற்ற படங்களில் நடித்த நடிகர்களின் உடை, பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை ஏலம் விடப்படுவது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா’ படத்தில் அவர் பயன்படுத்திய தலைப்பாகை, சந்திரமுகி படத்தில் ரஜினி பயன்படுத்திய வாகனம், ஏழாம் அறிவு படத்தில் சூர்யா பயன்படுத்திய குதிரை உள்பட பல பொருட்கள் இதுவரை ஏலம் விடப்பட்டுள்ளது. அந்தந்த நடிகர்களின் தீவிர ரசிகர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொள்வதுண்டு.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தில் அவர் பயன்படுத்திய காஸ்ட்யூம்கள் விரைவில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

‘கபாலி’ படத்தில் வயதான ரஜினியின் கோட் உள்பட அவரது காஸ்ட்யூம்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. தான் ஏன் ‘கோட்’ போடுகிறேன் என்பதற்கு ரஜினி இந்த படத்தில் விளக்கமும் அளித்திருப்பார். இந்த படத்தில் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் அனுவர்தன், ரஜினிக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.