சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி விறுவிறுப்புடன் ஓடி வரும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்தன.

வில்லன்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளிவிட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் ‘கபாலி’யை அவருடைய பள்ளியில் படித்த மாணவன் ஒருவரே காவல்துறையின் அழுத்தம் காரணமாக சுடப்படுவது போன்று படம் முடிக்கப்பட்டிருக்கும்.

அதிகம் படித்தவை:  தமிழக அரசியலில் ரஜினி தகுதியானவர் இல்லை! - சுப்ரமணியசாமி

ஆனால் இந்த முடிவை ரஜினி ரசிகர்கள் பலர் ஏற்றுக்கொள்ளாததால் தற்போது ‘கபாலி’ இறுதியில் போலீசில் சரண் அடைவது போன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மலேசியாவில் இந்த காட்சிகள் மாற்றப்பட்டுவிட்டதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்திலும் இன்று அல்லது நாளை மாற்றப்படும் என தெரிகிறது.