ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று கோலாகலமாக வெளியானது.

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் மட்டும் இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ. 3.49 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும்.