கபாலி படம் அடுத்த வாரம் பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகின்றது, படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை திருட்டு விசிடி எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதை தொடர்ந்து தற்போது வந்த தீர்ப்பில் கபாலி படத்தை திருட்டு விசிடி வெளியிடும் தளங்களை உடனடியாக முடக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.