சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் வசூல் பல புதிய சாதனைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை வசூலில் இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’யின் 100 நாட்கள் வசூலை ‘கபாலி’ மூன்றே வாரங்களில் நெருங்கிவிட்டது என்ற தகவல் தற்போது வந்துள்ளது.

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான ‘தெறி’ திரைப்படம் சென்னையில் 100 நாட்கள் ஓடி ரூ.11.90 கோடி வசூலித்தது. இந்த சாதனையை ‘கபாலி’ வசூல் தற்போது நெருங்கிவிட்டது.

அதிகம் படித்தவை:  அஜித்தின் விவேகத்துக்கும் -விஜய்யின் மெர்சல்லுக்கும் இடையே உள்ள தொடர்புகள் இத்தனையா.?

கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் நேற்று வரை ‘கபாலி’ ரூ.11.07 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் ரூ.83 லட்சம் வசூல் மட்டுமே ‘தெறி’ சாதனையை முறியடிக்க தேவையாகவுள்ளது என்பதும் அதுவும் இன்னும் ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் படித்தவை:  விஜய், கமல் இடத்தில் கார்த்தி!

மேலும் கடந்த வாரம் அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை சென்னையில் இந்த படம் ரூ.70, 15,270 வசூல் செய்துள்ளது என்பதும், ‘திருநாள்’ உள்பட ஒருசில புதிய படங்களின் வசூல் ‘கபாலி’யின் வசூலை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.