fbpx
Connect with us

உலக அளவில் கபாலி வசூல் இத்தனை கோடியா? புதிய வரலாறு படைத்த ரஜினிகாந்த்

உலக அளவில் கபாலி வசூல் இத்தனை கோடியா? புதிய வரலாறு படைத்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் நேற்று உலகெங்கும் வெளியானது. இதுவரை உலக சினிமா பார்த்திராத ஆர்ப்பாட்டமான ஓபனிங்குடன் வெளியான கபாலி, பிரிமியர் காட்சிகள் மூலம் மட்டுமே ரூ 25 கோடி வரை குவித்துவிட்டது

இப்போது முதல் நாள் காட்சிகள் மூலம் வசூலான தொகை விவரங்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் மட்டும் ரூ 58 கோடிகள் வசூலாகியுள்ளது. உலகளவில் நடந்த பிரிமியர் ஷோக்கள் மற்றும் முதல் நாள் காட்சிகள் அனைத்தும் சேர்த்து ரூ 104 கோடிகளை இந்தப் படம் அள்ளியுள்ளது.

இந்திய திரைப்பட வரலாற்றில் இப்படியொரு வசூலை இதுவரை எந்தப் படம் குவித்ததில்லை. முதல் வார முடிவில் கபாலி வசூல் 200 கோடிகளைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

கபாலி படம் குறித்த விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தியேட்டர்களில் கட்டி ஏறுகிறது மக்கள் கூட்டம். எனவே அடுத்த வாரம் வரை படத்தின் வசூல் அமோகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top