தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘மெர்சல்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் உலகின் அதிக நாடுகளில் வெளியாகும் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெரும் அளவிற்கு பெரும்பாலான நாடுகளில் திரையிடப்படவுள்ளது.

மெர்சல் படம்  பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளதால் ட்விட்டர் எமோஜி, ஃபேஸ்புக் மெசன்ஜர் என பல்வேறு வகைகளில் ‘மெர்சல்’ படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.mersal audio teaser 1

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரின் லீ கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கில் மெர்சல்’ திரைப்படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2800 இருக்கைகள் கொண்ட ‘ரெக்ஸ் சினிமாஸ்’ திரையரங்கில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ மற்றும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ ஆகிய இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டுள்ள நிலையில் 3வது படமாக ‘மெர்சல்’ வெளியாகவுள்ளது. இது இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.

இத்தகவலை ‘லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)’ திரையரங்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் உள்ள திரையரங்குகளிலேயே ‘லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)’ தான் மிகவும் பெரியது என்பது சிறப்புக்குரியது.

இந்த திரையரங்கில் வெளியிட்ட ரஜினியின் கபாலி மற்றும்  எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி 2 மாபெரும் சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே அதுமட்டும் இல்லாமல் பாகுபலி-2 வசூலின் சாதனையை இன்னும் எந்த தமிழ் படத்தாளையும் முறியடிக்கவில்லை.

எனவே விஜய்யின் மெர்சல் இந்த படங்களை போல் ஒரு மாபெரும் சாதனை படைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 

மேலும் வரும் 6ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளதால் திட்டமிட்டபடி தீபாவளி தினத்தில் இந்த படம் வெளிவருமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தீபாவளி தினத்திற்குள் கேளிக்கை வரி பிரச்சனை சுமூகமாக முடிந்துவிடும் என்றும் எனவே ‘மெர்சல்’ ரிலீசுக்கு அப்படியான எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றும் மெர்சல் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here