ரஜினி நடித்த கபாலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக வெயிட்டிங்.

பாடல் வெளியீட்டு விழாவும் மிகவும் பிரம்மாண்டமாக ஜுன் 12ம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் அமெரிக்காவில் விடுமுறையை கழித்துவருவதால், பாடல் வெளியீட்டு விழாவை ரத்து செய்ய படக்குழுவினரும், தயாரிப்பாளரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கபாலி பட பாடல்கள் நேரடியாக விற்பனைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.