கபாலி இசை விழா ரத்து – இதுதான் காரணமா?

கபாலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியை காண ஆவலுடன் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு, அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துவிட்டது ‘பாடல் வெளியீடு விழா ரத்து’ என்ற செய்தி.

ரஜினி தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரால் இசை வெளியீடு விழாவிற்கு வரமுடியாத சூழ்நிலை இருக்கிறது. அதனாலேயே அந்த விழாவை ரத்து செய்துவிட்டு, பாடல்களை ஆன்லைனின் வெளியிடவுள்ளனர்.

மேலும், சமீபத்தில் வந்த தகவல்படி படம் ஜூலை 1ம் தேதி வெளியாகாது என்றும் கூறப்படுகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் இன்னும் முடிக்காமல் இருப்பதால், படத்தை ஜூலை 15ம் தேதிக்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளனர்.

விநியோகஸ்தர்களும் ஜூலை 1ம் தேதி படம் வெளியாவதை விரும்பவில்லை என்பதால்தான் இந்த முடிவு எடுக்கபட்டதாக கிசுகிசுக்கபடுகிறது.

Comments

comments