கடுமையாக கபடி பயிற்சி எடுத்த கங்கனா ரனவத்.. வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

பல அதிரடியான கதாபாத்திரங்களை விரும்பி ஏற்று நடித்து புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகை  கங்கனா ரனவத். இவர்  தற்போது தமிழில் இயக்குனர் விஜய் எடுத்து வரும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். ஜெயலலிதா வேடத்தில்  கங்கனா நடித்து வருகிறார்.

முன்னதாக மணிகரா படம் மூலம் சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்திருந்தார்.

இப்போது அஸ்வினி அய்யர் திவாரி இயக்கத்தில்  பங்கா என்ற படத்தில் கபடி வீ வீராங்கனையாக நடித்துள்ளார். கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நடிப்பதற்காக, கடுமையான கபடி பயிற்சி பெற்று இருக்கிறார் கங்கனா ரனவத். இதில் ஜஸ்ஸி கில், நீனா குப்தா, பங்கஜ் திரிபாதி, ரிச்சா சட்டா, யோக்யா பாஷின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சங்கர் எஹசான் லாய் இசை அமைத்து வருகிறார், ஜே.ஐ.பட்டேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த திருமணமான பெண்ணான கங்கனாவுக்கு இருக்கும்கபடி ஆர்வம் காரணமாக, அவரது வாழ்க்கையில் என்னென்ன பிரச்னைகள் ஏற்பட்டது என்பதை சொல்லும் இப்படம், வரும் ஜனவரி 24ம் தேதி வெளியாக உள்ளது.

kangana
kangana

Leave a Comment