fbpx
Connect with us

வாவ்… மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மானின் காற்று வெளியிடை டீசர் ரிலீஸ்.. டீசர்ல இதை கவனிச்சீங்களா..?

kaatru veliyidai teaser release

Videos | வீடியோக்கள்

வாவ்… மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மானின் காற்று வெளியிடை டீசர் ரிலீஸ்.. டீசர்ல இதை கவனிச்சீங்களா..?

வரைகலைஞர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னது நினைவுக்கு வருகிறது. “​தனது படங்களின்​ டைட்டில் டிசைன் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுபவர்களில் மணிரத்னம் குறிப்பிடப்படவேண்டியவர்” என்றார் அவர். காற்றுவெளியிடை படத்தின் டைட்டில் போஸ்டருடன் ரிலீஸான போதே ஆஹா என யோசிக்க வைத்தார் மணிரத்னம்.

காற்று வெளியிடை, மணிரத்னம், கார்த்தி, ஏ.ஆர்.ரஹ்மான், Kaartu veliyidai

அதென்ன காற்று வெளியிடை? நாயகன் பைலட். விமானம் காற்று வெளியிடையில்தான் பறக்கிறது அல்லவா… போதாதற்கு காற்று வெளியிடை கண்ணம்மா என்று பாரதியார் வரிகள் காதலுக்கும் பொருந்துவதால் அந்தத் தலைப்பு என்கிறார்கள். மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ என்றாலே எதிர்பார்ப்பு எக்கச்சக்கத்துக்கு எகிறும். இளைஞர்களை கிறுகிறுக்க வைத்த ஓகே கண்மணிக்குப் பிறகான படம் என்பதால் எக்ஸ்ட்ரா எதிர்பார்ப்பு வேறு.

படத்தின் போஸ்டர் வெளியானபோதே கார்த்தியா இது என்று கேட்கவைத்தார். அத்தனை ஸ்லிம்மாக இருந்தார். ஒரு போஸ்டரில் லைட்டான தாடியோடி இருக்க,  இன்னொன்றில் க்ளீன் ஷேவில் கவர்ந்தார். கார்த்தி நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்ததும் மணிரத்னத்திடம்தான் சேர்ந்தார். ஆய்த எழுத்து படத்தில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை மறுத்து அதே படத்தில் அவருடன் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ஏற்கெனவே நியூயார்க்கில் ஃப்லிம் மேக்கிங் கோர்ஸ் முடித்தவருக்கு இயக்குநராகத்தான் ஆசை இருந்தது. ஆனால் பருத்தி வீரனின் வெற்றி, கார்த்தியை நடிகராக மாற்றிவிட்டது. ஆய்த எழுத்து படத்தில் தலைகாட்டினாலும், ஹீரோவாக மணிரத்னத்துடன் இணையும் படம் என்பதால் இருவரது ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.  கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹைதரி நடித்திருக்கிறார். முதன்முறையாக மணிரத்னத்துடன் கைகோத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top