காற்று வெளியிடை கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இப்படத்தில் கார்த்தி பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பி இந்தியா வருவார்.

இதை பலரும் ‘அதெப்படி இவ்வளவு எளிதாக தப்பித்து இந்தியா வரமுடியும், என்ன கதை விடுகிறார்களா?’ என்று கிண்டல் செய்தனர்.

இதற்கு மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. இதில் ‘இந்த காட்சி ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

1971-ம் ஆண்டு இந்திய விமானப்படையின் திலீப் பாரூல்கரை பாகிஸ்தான் சுட்ட போது, அந்த ஆபத்தை தனது வாழ்க்கையின் பெரும் சாகசமாக மாற்றிக் கொண்டார். 1972ம் ஆண்டில் மல்விந்தர் சிங் கிரேவால், ஹரிஷ் சின்ஜி ஆகியோருடன் பாரூல்கர் ராவல்பிண்டியிலிருந்த போர்க் கைதிகளுக்கான முகாமிலிருந்து தப்பித்தார்.

Four Miles To Freedomஅவருடைய அந்த நிகழ்வை ‘Four Miles to Freedom’ என்று புத்தகமாக எழுதினார்கள், அதிலிருந்து தான் காற்று வெளியிடை படத்தில் அப்படி ஒரு காட்சியை வைத்தோம், உண்மையாக நடந்ததை தான் நாங்கள் எடுத்தோம்’ என விளக்கம் அளித்துள்ளனர்.

On 10th Dec 1971, Flight Lieutenant Dilip Parulkar was shot down over Pakistan. He quickly turned that catastrophe into…

Posted by Madras Talkies on Sunday, April 9, 2017

https://twitter.com/ARRahmanFC24x7/status/851705632478703616