மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் இன்று உலகம் முழுவதும் காற்று வெளியிடை படம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் அமெரிக்காவில் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கே ப்ரீமியர் காட்சிகள் தொடங்கிவிட்டது. இதில் மற்ற மணிரத்னம், கார்த்தி படம் அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவிற்கு கூட்டம் இருந்தது.

இப்படம் நேற்று ப்ரீமியர் காட்சியில் மட்டும் 64K டாலர் வசூல் செய்துள்ளது, இந்திய மதிப்பில் ரூ 42 லட்சத்திற்கு மேல் வசூல் செய்துள்ளது.

கண்டிப்பாக அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இப்படம் அரை மில்லியன் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.