Reviews | விமர்சனங்கள்
காற்றின் மொழி திரை விமர்சனம்.. காற்று வாங்குமா! புயல் அடிக்குமா..
காற்றின் மொழி விமர்சனம்
ஜோதிகா தனது குடும்பப்பாங்கான கதையில் நடித்து வெளிவந்துள்ள படம் தான் காற்றின் மொழி. படத்தில் ஜோதிகாவின் கணவராக விதார்த் நடித்துள்ளார். இவர் நடித்த மைனா படம் மிகப் பெரும் வெற்றி பெற்றது. காற்றின் மொழி இப்படத்தில் இல்லத்தரசியாக இருக்கும் ஒரு குடும்பப் பெண் வெளியில் சென்று வேலை பார்க்க ஆசைப்படுகிறார்.
இப்படம் பாதி காட்சிகள் ரேடியோ ஸ்டேஷனில் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ரசிகர்கள் கேட்கும் ஒரு சில சுவாரசியமான கேள்விகளுக்கு ஜோதிகா சுவாரஸ்யமாக பதில் அளிப்பது தான் இப்படத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

Jyothika version for Jimikki kammal Song
விதார்த் மட்டும் ஜோதிகாவின் ரொமான்ஸ் சீன்கள் மிக அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் காமெடிக்காக யோகி பாபு வரும் சீன்கள் கதைக்கு ஒட்டாத போல உள்ளது. ஆனால் மயில்சாமி வரும் இரண்டு மூன்று சீன்கள் மிக அற்புதமாக கைத்தடிகளை வாங்கி குவித்தது.இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் நெருங்கிய சொந்தம் என்பதால் மிக அருமையாக இசையமைத்துள்ளார். அதிலும் ஜோதிகா நடனமாடும் ஜிமிக்கி கம்மல் பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மொத்தத்தில் இப்படம் இல்லத்தரசிகளுக்கு எடுக்கப்பட்ட ஒரு மிகப்பெரும் உணர்ச்சிபூர்வமான படம் என்பதால் அனைத்து பெண்களுக்கும் இப்படம் ஒரு வரப்பிரசாதமாகும். கிராம ராதா மோகன் படம் என்றாலே குடும்ப பாங்கான படம் என்று அனைவரும் அறிந்ததே இப்படம் வெற்றியடைய அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்கும்படி கேட்டுக் கொள்கின்றனர் படக்குழுவினர்.
Rating: 2.75 / 5
