Connect with us

அண்ணாத்த படம் ஊத்தி முடியதால் ஊர் சுற்றும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி.. ட்ரெண்டிங் ஆன புகைப்படம்

nayanthara-vigneshshivan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அண்ணாத்த படம் ஊத்தி முடியதால் ஊர் சுற்றும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி.. ட்ரெண்டிங் ஆன புகைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவனுக்கு சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்தப் படம் மாபெரும் வெற்றி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அதனால் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தை அடுத்து விஜய் சேதுபதியை வைத்து தற்போது காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

சமீபத்தில் கூட விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படக்குழு ஒன்றாக இணைந்து ஹோட்டலில் சாப்பிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா உட்பட பலரும் உள்ளனர்.

நேற்றைய தினத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் வேலை பார்த்த 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பரிசோதனை செய்து நெகட்டிவ் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு புறமிருக்க மற்றொரு புறம் சில நாட்களாக பிரிந்திருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது அண்ணாத்த படத்தை ஊத்தி மூடி விட்டு தற்போது உல்லாசமாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஹைதராபாத்தை கலக்கி வருகின்றனர்.

kaathu vaakula rendu kadhal

kaathu vaakula rendu kadhal

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top