fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

காப்பான் பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிய இளம் இயக்குனர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காப்பான் பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிய இளம் இயக்குனர்கள்

கே வி ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் சூர்யா, ஆர்யா, மோகன்லால் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ள படமே காப்பான். இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் இப்படம் பார்த்த பின் தங்களின் கருத்தை இயக்குனர்கள் சக்தி சௌந்தர்ராஜன் மற்றும் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

சக்தி சௌந்தர்ராஜன்

“காப்பான் பார்த்தேன், சூர்யா சார் அருமையாக நடித்துள்ளார். ப்ரோ ஆர்யா இரண்டாம் பாதியில் முக்கிய காட்சிகளில் அசத்தியுள்ளார். சாயீஷா தேவதை போல வந்துள்ளார். இயக்குனர் கே வி ஆனந்த் அனைவரும் ரசித்து பார்க்கும் படியான படத்தை கொடுத்துள்ளார். தன் படம் வாயிலாக நம்மை வெவ்வேறு கதைக்களத்தில் பயணிக்க வைக்கிறார். சூப்பர் லைக்கா புரொடக்ஷன்ஸ்.” என பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன்

இன்றைய ரசிகர்கள் படத்தை ரசிப்பதை தவிர்த்து விட்டு ரொம்ப ஆராய ஆரம்பித்துவிட்டனர். சில ரெவியுவர்களும் தங்களுக்கு அதிகம் தெரியும் என சகட்டுமேனிக்கு பேசுகின்றனர் அடுத்தவரின் உழைப்பை பற்றி. ஒரு படம் என்பது அணைத்து விதமான ரசிகர்களுக்கும் ஏற்றது போல பல கலவையாக தான் இருக்க வேண்டும். இன்று சில பொதுமக்களும் ரெவியூ செய்ய ஆர்மபித்துவிட்டனர். கூலாக இருங்கள். இந்த உலகில் எதுவுமே பெர்பெக்ட் கிடையாது. சில குறைகளை மறந்து படத்தை அப்படியே என்ஜாய் செய்யுங்கள்.

காப்பானில் திரைக்கதை, ட்விஸ்ட், அசத்தலான நடிப்பு மற்றும் பல விஷயங்கள் எனக்கு பிடித்துள்ளது. இயக்குனர் பிரதமமந்திரி ஆபீஸ் தொடங்கி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல பிரச்சனைகளை சொல்லியுள்ளார். மோகன் லால் அருமையாக நடித்துள்ளார்.

Vignesh Shivan about kaappaan

சூர்யா சார் சூப்பராக உள்ளார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு நமக்கு திரையில் தெரிகின்றது. ஆர்யா சிம்பிள் மற்றும் கூல். காப்பான் அணைத்து வித ரசிகர்களுக்கும் ஏற்ற படம். உங்கள் குடும்பத்துடன் சென்று பாருங்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top