Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதியை பங்கமாக கலாய்த்த காப்பான் டீம்.. கோபத்தில் ரசிகர்கள்

suriya-vijay-sethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியை பங்கமாக கலாய்த்த காப்பான் டீம்.. கோபத்தில் ரசிகர்கள்

சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான காப்பான் படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் வசனங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன. எதிர்க்கட்சியான திமுக-வை தாக்கும் வகையில், தாத்தா, மகன், பேரன் என பதவிக்கு வருவதற்கு இது என்ன சித்த வைத்தியசாலையா? என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. திமுகவை கொச்சைப்படுத்துகிறார்கள் என ஒரு கூட்டம் கிளம்பியது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை பங்கமாக கலாய்க்கும் வகையில் உள்ள வசனத்தை சமுத்திரகனி படத்தில் பேசியிருப்பார்.

அது என்னவென்றால், ஒரு காட்சியில் சமுத்திரகனி மனைவியாக நடித்த பூர்ணா, விஜய் சேதுபதி புகைப்படம் போட்ட புத்தகம் ஒன்றை நெஞ்சில் வைத்து உறங்கிக் கொண்டிருப்பார். அதைப்பார்த்து சமுத்திரகனி, இவன் வேற எப்போ பாரு பொண்ணுங்க நெஞ்சில் ஏறி உக்காந்துக்குவான் என்று பேசியிருப்பார்.

விஜய் சேதுபதி ரசிகர்கள், விஜய்சேதுபதியை அவமானப்படுத்தி விட்டதாக கூறி ஒரு பக்கம் கொந்தளித்து உள்ளனர். இதற்கு நேரடியாக படக்குழு, இந்தக் காட்சியும் வசனமும் படத்தில் இடம்பெறும் என விஜய்சேதுபதிக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டு விட்டது என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஒரு படத்தைக்கூட ஓட விட மாட்டாங்க போல..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top