Tamil Cinema News | சினிமா செய்திகள்
பட்டாசு வெடித்து கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்.! காப்பான் அப்டேட் இதோ

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா NGK படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் சூர்யா கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா காப்பான் திரைப்படத்தில் ஒரு ராணுவ அதிகாரி போல் நடித்து உள்ளார் இது அனைவரும் அறிந்ததே, இந்த திரைப்படத்தின் கதை சூர்யா ஒரு சர்வதேச பிரச்சினையை எப்படி கையாளுகிறார் என்பதுதான் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதேபோல் காப்பான் திரைப்படம் அயன் திரைப்படத்தை போல் பல மடங்கு விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு அப்பாவாக மோகன்லால் நடித்துள்ளார்.
தற்பொழுது காப்பான் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழு , மேலும் திரைப்படம் ஆகஸ்ட் 15 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
