கோவில்பட்டி அருகில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர் தான் இந்த வெங்கட். சிறு வயதில் இருந்தே இவருக்கு நடிப்பில் ஆர்வம், தன் பள்ளி ட்ராமாக்களில் நடித்தவர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையினால் சென்னை நோக்கி வீட்டை விட்டு வந்தவர். இங்கு காய்கறிச் சந்தையில் வேலை பார்த்து மிகவும் கஷ்டப்பட்டு பின் தான் நடிகரானார்.

இயக்குனர் விஜய் பிரபாகரனை தன் குருவாக கருதுகிறார் காளி வெங்கட். பல பேட்டிகளில் தனக்கு சினிமா பற்றி கற்றுக்கொடுத்தவர் இவர் தான் என்றும் கூறியுள்ளார். வெங்கட்டின் முதல் படம் 2008ல் விஜய் பிரபாகரனின் ‘தசையினை தீ சுடினும்’, இப்படம் கடைசி வரை ரிலீஸ் ஆகவில்லை. இப்படத்தில் தன் கதாப்பாத்திரத்தின் பெயரான காளி என்பதை சேர்த்துக்கொண்டு தான் இவர் காளி வெங்கட் ஆனார்.

தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராக இன்று வலம் வருபவர். துணை நடிகராக தன் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர். பின்னர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பல குறும் படங்களில் நடித்து ரீச் ஆனவர். முண்டாசுப்பட்டியில் காமெராமேனின் உதவியாளராக, இறுதி சுற்று படத்தில் குடிகார தந்தையாக, மெர்சல் படத்தில் அப்பாவி ஆட்டோ ஓட்டுநராக நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

#KaaliVenkat #Marriage

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இவருக்கும் சென்னை கேகே நகரை சேர்ந்த ஜனனி என்பருக்கும் சென்னையை அடுத்துள்ள திருப்போரூர் கந்தசாமி கோயிலில். அக்டோபர் 30அன்று மிக எளிமையாக நடை பெற்றது இவரின் திருமணம். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். அவருக்கு நெருக்கமான திரையுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டார்கள். முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார் இத்திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Janani, Kalli Venakt, Mundasuppati Director RamKumar & his close friends.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்: வாழ்த்துக்கள் காளி வெங்கட்.