kali-venkatதமிழ் சினிமாவின் இளைய தலைமுறை காமெடி கம் குணச்சித்திர நடிகர் காளி வெங்கட்டுக்கு இறுதிச்சுற்று மிகப்பெரிய வரவேற்பைத் தந்திருக்கிறது.

இறுதிச்சுற்று “சாலா கடூஸ்” என்ற பெயரில் இந்தியாலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தமிழில் மட்டுமல்லாது இந்தியிலும் அதே பாத்திரத்தில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்திருப்பது நம்ம காளியே தான்.

இறுதிச்சுற்று படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி காளியிடம் கேட்டால்,

அதிகம் படித்தவை:  சென்னை போலீஸ் கமிஷனரிடம் 'இறுதிச்சுற்று' இயக்குனர் புகார்

அவர் ,

இந்தி சினிமாவுக்கு போனது சந்தோஷம்னா இறுதிச்சுற்று தமிழ் பார்த்துட்டு நெறைய பேர் பாராட்டுறது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

அதுக்கு முதல் விதை போட்ட சுதா மேடத்துக் நான் எப்போதும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.

இந்தியில என்னோட நடிப்பை பார்த்துட்டு, யார் அந்த புது நடிகர்னு நெறைய பேர் கேட்கிறாங்கன்னு சொன்னாங்க. சந்தோஷமா இருக்கு.

அதிகம் படித்தவை:  அரண்மனை-2, இறுதிச்சுற்று, ரஜினிமுருகன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- முதலிடம் யாருக்கு?

ஒண்ணு ரெண்டு புது படத்துல கேட்கிறாங்கன்னு சொன்னாங்க. இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

கண்டிப்பாக எனக்கு தெரிஞ்சதை என்னால முடிஞ்சதை கடைசி வரை சினிமால செய்துட்டே இருப்பேன்.

என்று நெகிழும் காளி வெங்கட் நடிப்பில், மிருதன், டார்லிங் 2, இறைவி, ராஜா மந்திரி, தெறி, கொடி என வரிசைக் கட்டுகின்றன படங்கள்.