fbpx
Connect with us

Cinemapettai

தடைகளை தகர்த்து ரிலீஸுக்கு தயாராகியது காளி…

News | செய்திகள்

தடைகளை தகர்த்து ரிலீஸுக்கு தயாராகியது காளி…

விஜய் ஆண்ட்னியின் நடிப்பில் உருவாகி இருக்கும் காளி திரைப்படம் வரும் மே 18ந் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியது.

தமிழக அரசியலில் மன்னனாக இருக்கும் குடும்பத்தில் மருமகளாக அடியெடுத்து வைத்தவர் கிருத்திகா உதயநிதி. இவர் நடிகர் உதயநிதியின் மனைவி. கிருத்திகா இயக்குனராக வணக்கம் சென்னை படத்தில் அறிமுகமானார். படத்திற்கு ஆகாஓஹோ ஹிட் அடிக்கவில்லை என்றாலும் பலர் பேசும் அளவிற்கு பெரும் வெற்றியை பெற்றது. அனிருத் இசையமைத்து இருந்த இப்படத்தின் பாடல்களும் சூப்பர்ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து, கிருத்திகா இயக்கத்தில் இரண்டாவது படமாக காளி உருவாகி இருக்கிறது.

‘எமன்’ ‘அண்ணாதுரை’ படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் இப்படத்தை அவரின் சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், இப்படத்திற்கு விஜய் ஆண்டனி தான் இசையமைத்து வருகிறார். அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை மார்ச் மாதமே வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், தயாரிப்பாளர்கள் போராட்டத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, காளி படத்திற்கு எதிராக பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளரான வில்லியம் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘அண்ணாதுரை’ திரைப்படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக காளி திரைப்படத்தின் உரிமையை தனக்கு தருவதாக கூறிய விஜய் ஆண்டனியும், அவரது மனைவி பாத்திமாவும் தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்தாக குறிப்பிட்டு இருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி படத்திற்கு தடை வித்தனர்.

பின்னர், விஜய் ஆண்டனி தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணையில் விஜய் ஆண்டனி வில்லியம் அலெக்சாண்டரின் பிக்சர் பாக்ஸ் நிறுவனத்துக்கு ரூபாய் 2 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தைச் செலுத்திவிட்டு படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதை தொடர்ந்து, தடைகளை தகர்த்த காளி திரைப்படத்தை வரும் மே 18ல் வெளியிட படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்படி அழகாக இருந்த சார்மி குண்டாக மாறிவிட்டாரே.! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top