பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான ஹரீஷ் கல்யாண், தற்போது பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துத் தயாரிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடித்துள்ளார். இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்தார். யுவன் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், படம் ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், புரியாத புதிர் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஹரீஷ் கல்யாண் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த மார்ச் மாதமே ஷூட்டிங்கைத் தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தமிழ் சினிமா ஸ்டிரைக் காரணமாக தாமதமானது. இந்தநிலையில், வேலை நிறுத்தம் முடிந்த நிலையில் ஷூட்டிங்கைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதற்காக நடிகர்களை இறுதி செய்யும் பணியில் தயாரிப்பு தரப்பும், இயக்குநரும் ஈடுபட்டு வருகின்றனர். ஹீரோயினாக ஷில்பா மஞ்சுநாத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிருத்திகா உதயநிதி – விஜய் ஆண்டனி கூட்டணியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான காளி படத்தில், சுனைனா, அஞ்சலி மற்றும் அம்ரிதா ஆகியோருடன் 4 நாயகிகளில் ஒருவராக ஷில்பா நடித்திருந்தார். பெங்களூரு மாடலான அவர், சாண்டல்வுட்டில் ரோசாப்பூ படம் மூலம் அறிமுகமானவர். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.