Connect with us
boomerang-movie

இறுதிகட்டத்தில் விஜய் ஆண்டனியின் ‘காளி’: லேட்டஸ்ட் அப்டேட் !

News | செய்திகள்

இறுதிகட்டத்தில் விஜய் ஆண்டனியின் ‘காளி’: லேட்டஸ்ட் அப்டேட் !

‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் கிருத்திகா உதயநிதி இயக்கிவரும் படம் ‘காளி’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இப் படத்தில் சுனைனா, அஞ்சலி, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

Vijay Antony – Anjali – Kirthuga Udayanithi

இந்தப் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாது, இசை அமைத்து, படத்தைத் தயாரிப்பதும் விஜய் ஆண்டனி தான். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு .லாரன்ஸ் கிஷோர் எடிட்டர். இந்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர் படக்குழு.

kaali

இந்நிலையில் விஜய் ஆண்டனி  ட்விட்டரில் படத்தின்  ஷூட்டிங் காசியில்  நிறைவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷ் அல்லது  சிம்பு  நடிக்க வேண்டிய படம்தான் காளி. சில காரணங்களுக்காக அது நடக்காமல் போனதாம். பின்னர் தான் விஜய் ஆண்டனியை முடிவு செய்தாராம் இயக்குனர்.

kirthuga udayanithi – Team Kaali

கிருத்திகா உதயநிதி இந்தப் படத்தை முற்றிலும் ஒரு கமர்ஷியல் படமாகத்தான் உருவாக்கி உள்ளாராம்.  போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் துடங்கி விட்டதாம்.

பிச்சைக்காரன்; படத்திற்குப் பிறகு அது போன்றதொரு வெற்றியை மீண்டும் விஜய் ஆண்டனி தருவார் என்று பலரும் எதிர்பார்க்கும் படம் தான் இந்த காளி .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top