Tamil Cinema News | சினிமா செய்திகள்
காலா ரஜினியின் ஜீப்பை கைப்பற்றிய பிரபல தொழிலதிபர் ! இப்போ எங்கு இருக்கிறது தெரியுமா ?
காலா – கிங் ஆப் தாராவி
சூப்பர் ஸ்டார் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள அரசியல் படம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் காலா சேட் கதாபாத்திரத்தில் ரஜினி அசத்தியுள்ளார். இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வந்ததும் இரண்டு விஷயங்கள் அதிக ரீச் ஆனது. ஒன்று ரஜினி கெத்தாக அமர்ந்திருந்த ஜீப் மற்றோன்று அவர் அருகில் இருந்த நாய்.
மஹிந்திரா தார் – காலா ஜீப்
6 நபர்கள் அமரக்கூடிய அது மஹிந்திரா தார் வகை மாடல். அதை தான் சூப்பர் ஸ்டார் பயன் படுத்தி இருந்தார். இந்நிலையில் அந்த வண்டியை தான் தற்பொழுது வைத்துள்ளதாக மஹிந்திரா குழுமத்தின் சார்மன் ஆனந்த் மஹிந்திரா தன ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
“காலா போஸ்டரில் உள்ள தார் வண்டியை நம் அருங்காட்சியகத்தில், வைக்க எண்ணினேன். தனுஷும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார், இப்பொழுது அந்த வண்டி பத்திரமாக சென்னையில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேலியில் உள்ளது. தலைவர் போல போஸ் கொடுங்கள் என்று சொன்னேன். பாருங்க நம் ஸ்டாப் அசத்தியுள்ளார்கள்.” என்றும் லிங்க் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதுமட்டுமன்றி ஒருநபர் “பொதுமக்களை அனுமதிப்பீர்களா ? போஸ் கொடுக்கிறோம்.” என்று கேட்டார்.
அதற்கு மஹேந்திராவும் “நல்ல யோசனை. நிறைய நபர்கள் ஆசையாக இருப்பார்களோ ?” என்றும் கேட்டுள்ளார்.