இன்று பகல் 11 மணிக்கு வெளியிடப்படுவதாக இருந்த காலா திரைப்படத்தின் டீசரை, நேற்று நள்ளிரவே நடிகர் தனுஷ் வெளியிட்டதால், ரசிர்கள் குஷியில் உள்ளனர் .

kaala

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கபாலி’. மலேசிய வாழ் தமிழர்களின் வாழ்வை சித்தரிக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டிருந்தது. ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக ரஜினி நடித்திருந்தார். இதனை தொடர்ந்து மும்பை பின்னணியில் இந்த காலா கதை உருவாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  அது மட்டும் சரியாக இருந்திருந்தால், கோச்சடையான் பாகுபலியாக இருந்திருக்கும்!

காலா திரைப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடப்படும் என்று முதலில் நடிகர் தனுஷ் அறிவித்தார். இதனையடுத்து, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவை ஒட்டி, டீஸர் ரிலீஸ் செய்யவில்லை. நேற்று இரவு தனுஷ் தன் ட்விட்டரில் டீசரை வெளியிட்டார்.