fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் எப்பொழுது வெளியாகிறது தெரியுமா ?

kaala

News | செய்திகள்

சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் எப்பொழுது வெளியாகிறது தெரியுமா ?

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார் . லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது.

Rajinikanth Kaala introduction scene leaked

Rajinikanth Kaala

அரசியல் அறிவிப்பு செய்த பின் வெளிவரும் முதல் படம் இது தான். மேலும் ‘கபாலி’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

kaala

ரஜினியுடன் ஹூமா குரோஷி, நானா படேகர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்து விட்டபோதும், 2.O படத்திற்காக காலா படத்தின் ரிலீசை தள்ளி வைத்தனர்.

KAALAon 

2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடியாதா காரணத்தால் ஏப்ரல் மாதத்தில் 27 ம் தேதியில் பிரமாண்டமாக உலகெங்கும் ரிலீஸ் செய்யப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது.

இந்நிலையில் காலா படத்தின் டீசரை மார்ச் 10- ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழு . விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனுஷ் தன் ட்விட்டரில் வெளியிடுவாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top