Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சேனல்களுக்கு டாட்டா காட்டி புது ரூட் பிடித்த காலா டீம்

காலா இசை வெளியீட்டு நிகழ்ச்சியை எந்த சேனலுக்கும் கொடுக்காமல், புது ஐடியாவை கையாள தயாரிப்பாளாரான தனுஷ் முடிவு செய்திருக்கிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காலா. இதற்கு முன்னரே இருவர் கூட்டணியில் அமைந்த கபாலி படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால், காலா படத்திற்கு ஓவர் பில்டப் கிரியேட் செய்வதை வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தவிர்த்து விட்டது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் பாடல்களில் ரஜினிக்காக பல முயற்சிகளை செய்திருக்கிறாராம். ஒரு பாடலில் 10 லட்சம் பாடகர்கள் பாடி இருக்கிறார்கள் என சமீபத்தில் சந்தோஷ் ட்வீட் போட்டது சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 9ந் தேதி சென்னை வொய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறதாம்.

ரஜினி நிகழ்ச்சிகள் என்றாலே அதில் மாஸ் அதிகமாக இருக்கும். குடும்பங்களின் விடுமுறை டைமை கொள்ளை அடிக்க பிரபல தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பல கோடி ரூபாய் மதிப்பிற்கு அந்நிகழ்ச்சியை வாங்கி, ஒளிபரப்பும். ஆனால், இந்த முறை இதற்கு தனுஷ் பெப்பே காட்டி இருக்கிறார்.

காலா படத்தின் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ நிறுவனமும், வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இசை வெளியீட்டை நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறார்கள். ஆனால், டிவியில் இல்லை என்பது தான் இதில் டுவிஸ்டே. அவர்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளங்களிலும், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்திலும் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இது நெட்டிசன்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்பது படக்குழுவின் திட்டமாம்.

காலா ஜூன் 7ம் தேதி வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top