fbpx
Connect with us

காலா படத்துக்கும் பாடல் எழுதுபவர் இவர்தானா..!!!

News / செய்திகள்

காலா படத்துக்கும் பாடல் எழுதுபவர் இவர்தானா..!!!

‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான், நீ, நாம் வாழவே’ என்ற பாடல் பாடலாசிரியை உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.அதன்பின், ‘கபாலி’ திரைப்படத்தில் ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ ஆகிய இரண்டு பாடல்களும் உமாதேவியின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன.

இப்போது, தமிழ் சினிமாவின் மிக முன்னணி கதாநாயகிகளான, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார், உமாதேவி.
த்ரிஷா, விஜயசேதுபதி நடிக்கும் ’96’, ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும், நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ ஆகிய 3 படங்களுக்கும் ஒரே நேரத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார், உமாதேவி.

‘மகளிர் மட்டும்’ படத்தில் ஜிப்ரான் இசையில் உமாதேவி எழுதியுள்ள, ‘அடி வாடி திமிரா.’ பாடல் சூப்பர் ஹிட்.இதன் லிரிக் வீடியோ மட்டும் இதுவரை ஒரு கோடி பார்வையாளர்களுக்கு மேல் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.ஜிப்ரான் இசையில் எழுதியுள்ள ‘அறம்’ மற்றும் கோவிந்த் மேனன் இசையில் எழுதிய ’96’ படங்களின் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் உமாதேவி.”அறம்” படத்தில் இடம்பெற்றுள்ள, “புது வரலாறே புற நானூறே” மற்றும் “தோரணம் ஆயிரம்” பாடல்களும் வெளியானதில் இருந்து அதன் வரிகளுக்காக தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிக்கிறார், உமாதேவி.

வழக்கமான பாடல்கள், சூழல்கள், அதற்கு பழக்கமான வரிகள் என்பதைத்தாண்டி உமாதேவியின் வரிகளும் வார்த்தைகளும் வெடிக்கின்றன என்பது “அறம்” படப்பாடல்களை கேட்டவர்களின் கருத்தாக இருக்கிறது.த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா 3 பேரின் படங்களிலும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பாடல்கள் எழுதியதில் மகிழ்ச்சியடைவதாக சொல்லும் உமாதேவி, வழக்கமான பாடல் வரிகளில் இருந்து என் வரிகள் மாறுபட்டிருப்பதை கவனித்து பலரும் பாராட்டும்போது உண்மையாகவே மகிழ்கிறேன் என்கிறார்.பரபரப்பாக பல படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் உமாதேவி, மீண்டும் தன் ஆஸ்தான இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணியுடன் ஹாட்ரிக் ஹிட் அடிக்க இருக்கிறார்.
மெட்ராஸ், கபாலி, படங்களைத் தொடர்ந்து ‘காலா படத்திற்கு பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் உமாதேவி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top