Connect with us
Cinemapettai

Cinemapettai

kaala

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காலா படம் இப்படியும் வதந்தி பரவுகிறதா இதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல லைகா நிறுவனம் ஒரே போடு.!

ரஜினி தற்பொழுது காலா படத்திலும் 2.0 படத்திலும் நடித்து முடித்துள்ளார், ரஞ்சித் இயக்கத்தில் தான் காலா படம் உருவாகியுள்ளது, படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார் . லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த காலா படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தில் பட்டைய கிளப்பியது இந்த டீசரில் வரும் ஒவ்வொரு வசனமும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டாகி வந்தது. இந்த நிலையில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரிராவ் நடித்துள்ளார்.

இயக்குனர் ரஞ்சித் கபாலி படத்திலும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத நடிகையான ராதிகா ஆப்தேவை நடிக்க வைத்தார், அதேபோல் இந்த படத்திலும் தமிழ் ரசிகர்களால் அதிகம் கண்டு கொள்ளாத ஈஸ்வரிராவ்வை ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைத்துள்ளார்.

காலா படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் கைபற்றியுள்ளது படத்தை அடுத்த மாதம் 27 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டம் செய்துள்ளார்கள் என அறிவிக்க பட்டது ஆனால் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் நடப்பதால் ரிலீஸ் தள்ளி போகிறது என கோலிவுட்டில் செய்திகள் பரவியது.

தற்பொழுது லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது” நாங்கள் யாரிடமும் காலா ரிலீஸ் தேதி பற்றிய செய்தியை கூறவில்லை. காலா பற்றி பரவும் செய்திக்கும் வதந்திக்கும் நாங்கள் பொறுப்பல்ல என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top