Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காலா ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் தனுஷ்.!

தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் நடந்ததால் ஒன்றரை மாதமாக எந்த புது படமும் ரிலீஸ் ஆகவில்லை இன்று தான் மெர்குரி படம் ரிலீஸ் ஆனது, இன்றில் இருந்து சினிமா ரசிகர்களுக்கு விருந்துதான் ஏன் என்றால் டிக்கெட் விலை அதிகரிப்பால் பலர் தியேட்டரில் படம் பார்ப்பதையே தவிர்த்து வந்தார்கள்.

அதனால் ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்க பல முயற்ச்சிகள் நடைபெற்று வருகிறது, அதனால் இனி டிக்கெட் வழங்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என விஷால் அறிவித்துள்ளார். ஒரு பெரிய ஸ்டார் படம் வெளியிட்டால் ரசிகர்கள் திரைக்கு வந்துவிடுவார்கள் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ரஜினி நடித்த காலா படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார் தனது டிவிட்டரில் ஆம் வருகிற ஜூன் 7 ம் தேதி காலா படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தனுஷ், ரஞ்சித் இயக்கிய இந்த படத்திற்கு பலத்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top