Tamil Cinema News | சினிமா செய்திகள்
காலா ரிலீஸ்.. ஆனால் தமிழகத்தை விட்டு பறந்தார் சூப்பர்ஸ்டார்

காலா ரிலீஸ்.
காலா ரிலீஸ் நேரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு பறந்து விட்டதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே சூப்பர்ஸ்டாரின் ரசிகராக தான் இருப்பர். காரணம், பொறுமையாக நாயகன் நடித்து வந்த காலத்தில் தனக்கென ஒரு ஸ்டைலை ஏற்படுத்தி கொண்டு வெற்றி கண்டவர் ரஜினிகாந்த். வழக்கமாக அவருக்கு ஒரு படம் பண்ண மட்டுமே பிடிக்கும். சமீபகாலமாக, ஒரு படத்தில் நடித்துக்கொண்ட இன்னொரு படத்தை வெளியீட்டுக்கும் தயாராக வைத்து இருக்கிறார். அந்த வகையில், இன்று திரைக்கு வந்திருக்கிறது காலா. பா.ரஞ்சித் படத்தை இயக்கி இருக்கிறார். எல்லா ரசிகர்களும் படத்திற்கு அமோக வரவேற்பை கொடுத்து இருக்கிறார்கள். இதனால், நேற்று வரை சரிவில் இருக்கும் டிக்கெட் விற்பனையில் இன்று மாற்றம் வரும் என தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார். இதில், இருவருமே வித்தியாசமாக கலைஞர்கள் என்பதால் படத்திற்கு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜினிக்கு மகன்களாக பாபி சிம்ஹா மற்றும் ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் ரஜினிக்கு சமமான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்திற்காக ரஜினிகாந்த் மீண்டும் கருப்பு தாடி கெட்டப்பிற்கு மாறி இருக்கிறார். தொடர்ந்து, படப்பிடிப்புகள் இமயமலையில் அமைந்துள்ள டார்ஜிலிங் பகுதியில் நடைபெற உள்ளது. அங்கு ஒரு கல்லூரியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதால், ரஜினி இப்படத்தில் பேராசிரியராக நடிக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினி இப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து புறப்பட்டு இருக்கிறார். விரைவில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
