Tamil Cinema News | சினிமா செய்திகள்
காலா படத்தின் உரிமையை கைப்பற்றிய விநியோகஸ்தர்கள்.! மாஸ் தகவல்
Published on
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஜூன் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை வாங்கி வெளியிடும் லைகா நிறுவனம் தற்போது பகுதி வாரியாக வியாபாரத்தை துவக்கியுள்ளது.
சென்னை சிட்டி உரிமையை எஸ்.பி.ஐ. சினிமாஸ் பெற்றுள்ளது, மேலும் சேலம் ரிலீஸ் உரிமையை 7ஜி சிவாவிற்க்கும் மினிமம் கேரண்டி அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை ராம்நாடு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இதன் உரிமையாளர் பைனான்சியர் அன்பு செழியன் சில மாதங்கள் முன்பு நடிகர் சசிகுமார் மைத்துனர் தற்கொலைக்கு காரணமாக இருந்தார் என குற்றச்சாட்டு எழுந்து பெரிய சர்ச்சைக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவரத்தினை ‘லைக்கா புரொடக்க்ஷன்ஸ்’ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
