fbpx
Connect with us

Cinemapettai

காலா படத்தை வெளியீடும் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனா, தமிழ் ராக்கர்ஸில்.

kaala

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காலா படத்தை வெளியீடும் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனா, தமிழ் ராக்கர்ஸில்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் ரிலீஸ் தேதியை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

தமிழ் திரையுலகிற்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருவது தமிழ் ராக்கர்ஸ். வாராவாரம் வெளியாகும் புதுப்படங்களின் சூடு குறையாமல் இணையத்தில் ஏற்றிவிடுவதால், சில நல்ல படங்களை தவிர பல படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கம் பக்கம் தலைக்காட்டுவதையே தவிர்த்து விட்டனர். இருக்காத பின்னே, ஒரு டிக்கெட் விலை 160க்கும் மேல் இருந்தால் பாவம் தானே அவர்களும். இதனால் தமிழ் ராக்கர்ஸுக்கு ரசிகர்களின் சப்போர்ட் மட்டும் இன்றளவும் குறையவில்லை. நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவியேற்றதில் இருந்து, இந்த இணையத்தளங்களுக்கு மூடு விழா காண பல முயற்சிகளை செய்து வருகிறது. அனைத்துமே முடியாமல் பெரும் தலைவலியே அவருக்கு கொடுத்து வருகிறது. சிறு சிறு தளங்களின் அட்மின்களை கைது செய்தாலும் இந்த தமிழ் ராக்கர்ஸ் மட்டுமே இன்னும் முகமூடியுடனே திருந்து வருகின்றனர்.

தமிழ் ராக்கர்ஸ் மெகா நாயகர்களின் படங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டே படத்தை இணையத்தளத்தில் வெளியிடும். அதிலும் சிறு பட்ஜெட் படங்களுக்கு ஒரு நாள் கொடுக்கும் நேரத்தை கூட முன்னணி நாயர்களின் படங்களுக்கு கொடுப்பதில்லை. அந்த வகையில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் திரையரங்க ரிலீஸ் அன்றே தமிழ் ராக்கர்ஸிலும் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். இது படக்குழுவிற்கு மட்டுமல்லாமல் கோலிவுட் வட்டாரத்திலே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் காலா படத்தை தயாரித்து இருக்கிறார். ரஜினிகாந்துடன், ஈஸ்வரி ராவ், ஹீமா குரோஷி, அரவிந்த் ஆகாஷ் உள்பட பல முன்னணி நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ரம்ஜான் தினத்தை முன்னிட்டு காலா ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top