Tamil Cinema News | சினிமா செய்திகள்
காலா பார்க்க விடுமுறை அளித்த நிறுவனம்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் காலா படத்தை பார்க்க நிறுவனம் மொத்த ஊழியர்களுக்கும் விடுமுறை அளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் ஸ்டார் ஐகான் ரஜினிகாந்த். இவர் மீது எத்தனை மாற்று கருத்துக்கள வைக்கப்பட்டாலும், அவருக்கு இன்னும் தீவிர ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறார்கள். முதல் நாள் ரஜினி படத்தை பார்க்க செத்து போன பாட்டியை மீண்டும் காலி செய்து லீவ் லெட்டர் எழுவதெல்லாம் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. முதல் நாள் முதல் காட்சியில் அவரின் ஸ்டைலை பார்க்க ரசிகர்கள் ஏங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். இது அவரின் எல்லா படங்களிலும் தொடர்கதையாக தான் இருக்கிறது. காலாவிற்கு மட்டும் விதி விலக்கா என்ன?
காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ட்ரைலர் தேதியின் அறிவிப்பை வெளியிடும் போதே லீவ் லெட்டரை தயாராக வைத்திருக்கும்படி ட்வீட் தட்டினார். இதை தொடர்ந்து, வரும் 7ந் தேதி காலா தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், கேரளாவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்று காலா படத்தை சந்தோஷமாக கண்டுக்களிக்க தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதேப்போல், முன்னதாக கபாலி படம் வெளியான போதும், சென்னையை சேர்ந்த பல ஐடி நிறுவனங்கள் டிக்கெட்டை வாங்கி கொடுத்து லீவ் கொடுத்தது எல்லாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கும் தலைவனின் கதையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். ஈஸ்வரி ராவ், ஹீமா குரோஷி ஆகியோ ரஜினிக்கு நாயகிகளாஅக நடித்துள்ளனர். நானா படேகர், சமுத்திரக்கணி, திலீபன், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த வார இறுதியில் வெளியாகும் இப்படத்திற்கு தற்போது எதிர்பார்ப்புகள் ஜெட் வேகத்தில் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கேரளாவை போல சென்னையிலும் விடுமுறை விட நிறுவனங்கள் தயாராகி வருவதாகவும் ஒரு தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.
