ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் காலா, இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் பிரமாண்டமாக நடைபெற்றது.

காலா திரைப்படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீஸ் ஆகவேண்டியது தம் சினிமாவில் ஸ்ட்ரைக் காரணமாக தள்ளிப்போய்கொண்டே இருந்தது எப்போழுதும் ரஜினி திரைப்படத்திற்கு உலக அளவில் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

காலா திரைப்படம் ஜூன் 7 ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த நிலையில் காலா திரைப்படத்திற்கு பெரும் சவ்வாளாக, ஹாலிவுட் சினிமாவில் அதிக வசூல் ஆனா ஜுராசிக் பார்க் அடுத்த பாகம் ஜூன் 8 ம் தேதி ரிலீஸ் ஆகிறது அதுவும் பல ஆயிரம் திரையரங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இந்த திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாவதால் காலா படத்திற்கு பலத்த போட்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. போட்டியில் எந்த திரைப்படம் வெல்லும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.