Kaala

ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது உண்மையான பெயரை தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் காலா. இப்படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ் இப்படத்தில் ஜோடி போட்டு இருக்கின்றனர். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான சமயத்தில் இருந்தே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ரஜினிகாந்த், சந்தோஷ் நாராயணன், தனுஷ் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “தலைவருக்கு புகழ்ந்தால் பிடிக்காது. அதனால, அவரிடம் கற்றுக்கொண்ட சில விஷயங்களைப் பகிர்கிறேன் என பேச்சை ஆரம்பித்தார். படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு 2.30 மணி வரை நீண்டது. முதல் பட நாயகன் போல பொறுப்புடன் அவர் நடித்தார். தொழில் பக்தி என்பது அவரிடம் மாறாமலே இருப்பதை முதலில் கத்துக்கொண்டேன். காலா படத்தின் கதையை ரஞ்சித், அவரிடம் சொல்லும்போது, தயாரிப்பாளரிடமும் கதையைக் கூறுங்கள் என்று சொல்லினார். அப்போது, தயாரிப்பாளரை மதிக்கும் பண்பைக் கற்றுக்கொண்டேன். தலைவரால் பிழைத்தவர்களே அவரை பற்றி தவறாக பேசுவதை சிரித்து கொண்டே செல்லும்போது அவரிடம் இருந்த பொறுமையை கற்றுக்கொண்டேன்.

Kaala Audio Launch on May 9

சமீபகாலமாக, பலரும் அவருக்கு மன வருத்தம் ஏற்படுத்தும்படி சிலர் பேசி வருகிறார்கள். அவர்களையும் நிகழ்ச்சிக்கு அழைக்க கூறினார். ஏன் எனக் கேட்டப்போது, அவரும் என் நண்பர்கள் தான் என்றார். இதில், பெருந்தன்மையும், மன்னிக்கிற குணத்தையும் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்றார். தொடர்ந்து, பேசிய அவர், முதலில் வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ, சூப்பர் ஸ்டார், இன்று தலைவர், நாளை உங்களைப்போல நானும் காத்திருக்கிறேன் என்று கூறினார்.

கடைசியாக, இப்படத்தை நான் தனுஷாக தயாரிக்கவில்லை. பாட்ஷா படத்தை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்த வெங்கடேச பாபுவாக தான் தயாரித்து இருக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.