நடிகர் ரஜினிகாந்த் காலா படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டது தற்பொழுது போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக பொய்கொண்டு இருக்கிறது படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 27 ம் தேதி என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழு அதனால் படத்தின் வேலைகள் இரவு பகலாக நடந்து வருகிறது.

அதிகம் படித்தவை:  ரஜினியின் காலா திரைவிமர்சனம்.!
kaala

இப்படி இருக்க இந்த படத்தில் ஒரு பாடலை பிரபல பின்னணி பாடகர் விஜய்பிரகாஷ் பாடியுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தில் அறிமுக பாடல் எப்படி இருக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் வாக்கெடுப்பு நடத்தி வந்த சந்தோஷ் நாராயணன் இந்த பாடலை புதுவிதமாக உருவாக்கியுள்ளார் என தகவல் வந்துள்ளது.

அதிகம் படித்தவை:  வெளியான பிலிம்பேர் விருதுக்களுக்கான நாமினி பட்டியல்...
VIJAYPRAKASH

இந்த வித்தியாசமான பாடலைதான் விஜய்பிரகாஷ் பாடியுள்ளதாக கூறுகிறார்கள்,இவர் ஏற்கனவே ரஜினியின் எந்திரன் படத்தில் காதல் அணுக்கள் பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ரஜினிக்கு முதல் முறையாக அறிமுக பாடலை பாடியது இதுவே முதல் முறை.