Tamil Cinema News | சினிமா செய்திகள்
மெர்சல் முதல் நாள் வசூலை முறியடித்ததா காலா.? இதோ விவரம்
Published on
காலா சென்னை வசூல் விவரம்:
தமிழ் சினிமாவில் கடந்த வருடத்தில் நல்ல வசூல் செய்த படம் என்றால் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் தான், இந்த படத்தின் முதல் நாள் வசூலை இந்த வருடத்தில் வந்த திரைப்படம் எதுவும் முறியடிக்கவில்லை.
ஆனால் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் காலா இந்த திரைப்படம் நேற்று உலகம் எங்கும் ரிலீஸ் ஆனது படத்திற்கு பல இடங்களில் எதிர்ப்பு நிலவினாலும் பல இடங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது
தற்போது ரஜினிகாந்தின் காலா படத்திற்கும் அதே போலவே வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளில் மட்டும் காலா படம் சென்னை பகுதியில் 1.76 கோடி வசூலித்துள்ளது. இது மெர்சல் வசூலான 1.52 கோடி ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரம்மாண்ட சாதனையை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
