ரஜினி தற்பொழுது காலா படத்திலும் 2.0 படத்திலும் நடித்துவருகிறார், காலா படத்தின் டீசர் சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது ரசிகர்களிடையே  நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால் இந்த டீசரை வைத்து மீம்ஸ் கிரியட்டர்கள் பூந்து விளையாடிவிட்டார்கள். இருந்தாலும் டீசரில் ரஜினிகாத் அவரது மாஸ் ஸ்டைல் ஆப்படியே தொடர்ந்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

ரஞ்சித் இயக்கத்தில் தான் காலா படம் உருவாகியுள்ளது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஓன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது அந்த போஸ்டரில் ரஜினியுடன் ஒரு நாட்டு நாய் அமர்ந்திருக்கும். அந்த நாயின் தற்போதைய மதிப்பு தெரியுமா உங்களுக்கு?

KAALA

இந்த நாட்டு நாயை சென்னை புறநகரில் ஒரு கிராமத்தில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள் அதன் ஓனர்,அதுமட்டும் இல்லாமல் அதற்க்கு படத்தில் நடிப்பதற்கு பயிற்ச்சியும் கொடுத்துள்ளார்கள்.

kaala

காலா படத்தில் ரஜினியுடன் நடித்த இந்த நாட்டு நாய்க்கு மிகவும் கிராக்கி வருகிறது ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் நாட்டு நாய் நடித்ததால் வெளிநாட்டு தமிழர் இந்த நாட்டு நாயை சுமார் 2 கோடி வரை விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள்.

rajinikanths

ஆனால் இதனை வளர்த்த உரிமையாளர் இந்த நாட்டு நாயை என் பிள்ளை போல் வளர்த்ததால் அதனை கொடுக்க மறுத்துள்ளார். என்னா தான் இருந்தாலும் நாட்டு நாய்க்குன்னு ஒரு தனி சிறப்புதான்.