சூப்பர்ஸ்டார் ரஜினி தற்பொழுது காலா படத்திலும் 2.௦ படத்திலும் நடித்துள்ளார், இந்த படத்தை பல ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்கள் ஆனால் 2.௦ படமோ கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் படம் தள்ளி போய்க்கொண்டு இருக்கிறது, காலா படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளிவந்தது அனைவரிடமும் பிரமாண்ட வரவேற்ப்பை பெற்றது.

kaala
kaala

அதிலும் ரஜினி பேசும் வேங்கைய மகன் வசனம் பட்டி தொட்டி எங்கும் கேட்கும் அளவிற்கு பிரபலமானது, அதேபோல் மீம்ஸ் தெறிக்க விட்டார்கள் மீம்ஸ் கிரியட்டர்கள், இந்த படம் அடுத்தமாதம் வெளிவர இருந்தது ஆனால் ஒரு சில காரணத்தால் பட ரிலீஸ் தள்ளிபோகும் என கூறுகிறார்கள், இந்த நிலையில் காலா படத்தின் க்ளைமேக்ஸ் எது என்பது தெரியவந்துள்ளது.

காலா டீசரில் ரஜினி நெருப்பில் சண்டை போடுவது போல் காட்சி இடம் பெரும் அந்த காட்சிதான் காலா படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியாம். மேலும் படத்தில் 6 சண்டைகாட்சிகள் இருக்கிறதாம் படத்தில் இரண்டாம் பாதியில் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் தானாம் என கூறுகிறார்கள்.

kaala

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here