ரஜினி தற்பொழுது காலா படத்திலும் 2.0 படத்திலும் நடித்துவருகிறார், ரஞ்சித் இயக்கத்தில் தான் காலா படம் உருவாகியுள்ளது, படத்தை  வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார் . லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது.

kaala rajni dhoni

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த காலா படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தில் பட்டைய கிளப்பியது இந்த டீசரில் வரும் ஒவ்வொரு வசனமும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டாகி வந்தது. இந்த நிலையில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரிராவ் நடித்துள்ளார்.

இயக்குனர் ரஞ்சித் கபாலி படத்திலும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத நடிகையான ராதிகா ஆப்தேவை நடிக்க வைத்தார், அதேபோல் இந்த படத்திலும் தமிழ் ரசிகர்களால் அதிகம் கண்டு கொள்ளாத ஈஸ்வரிராவ்வை ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைத்துள்ளார்.

KAALA

காலா படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் கைபற்றியுல்லாது 75கோடி பட்ஜெட்டில் உருவான காலா படத்தை லைகா நிறுவனம் 125 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது சூப்பர்ஸ்டார் நடித்துள்ள மற்றொரு படமான 2.0 வை தயாரித்துள்ளதும் லைகா நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது