fbpx
Connect with us

Cinemapettai

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக உண்ணாவிரதம்… களமிறங்கும் காலா இயக்குநர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக உண்ணாவிரதம்… களமிறங்கும் காலா இயக்குநர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 102 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், இந்த சம்பவத்தில் போலீஸார் 34 பேருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ள போராட்டத்தை அமைதிப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போராட்டத்தின் முதல் வெற்றியாக ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்திருக்கிறார். இதனால் மக்கள் அமைதிதிரும்ப ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

குறிப்பாக எதிர்கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு வணிகர் சங்கங்களும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் இன்று ஒரு நாள் ஆட்டோக்கள் ஒடாது என சிஐடியூ தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதேபோல், துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தை அறிவித்துள்ளன. தமிழ் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நேற்று சேப்பாக்கம் முதல் தலைமைச் செயலகம் வரை பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

அதேபோல், திமுக சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், தமிழகம் கொந்தளிப்பான மனநிலையில் இருக்கிறது. இந்தநிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம் தெரிவித்து ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்த காலா இயக்குநர் பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி கோரி கடிதம் ஒன்றை அவர் அளித்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ரஞ்சித், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் எங்களை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு எதிர்காலத்தில் எந்த போராட்டம் நடத்தக் கூடாது என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்காக போலீசாரால் நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்காக சொந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது வேதனையிலும் வேதனை. இந்த சம்பவத்தைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் நாளை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறோம். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கோரி மனு கொடுத்துள்ளோம். தமிழ் கலை, இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொள்வார்கள்’என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top