பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மும்பை பின்னணியில் உருவாகியுள்ள படம் காலா. வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார் . லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை ஜூன் 7 வெளியிட இருக்கிறது.

படத்தின் இசை வெளியீடு மே 9 அன்று, என்று தனுஷ் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் மே தினத்தை முன்னிட்டு காலா படத்தின் சிங்கள் பாடலான “செம்ம வெயிட்டு” வெளியாகி வைரலானது.

ஆல்பம் ப்ரீவியூ

இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முன்பு அறிவித்தது போல தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ஆல்பம் ப்ரீவியூவை வெளியிட்டுள்ளார். படத்தில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளதாம். படத்தின் இசை வெளியீட்டு விழா YMCA மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்த ‘காலா’ டீம் திட்டமிட்டுள்ளது.

Track List

இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் தங்களின் பார்வையில் பாடல்களை பற்றி கூறியுள்ளார்கள்.